ஆகஸ்ட் 10, சென்னை (Chennai News): இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) தற்போது எஸ்.பி.ஐ வங்கியில் (SBI Bank) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேசிய அளவிலும், தமிழக அளவிலும் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்திருப்பது அவசியமாகும். இந்த வேலை தொடர்பான விவரங்கள் பின்வருமாறு காணலாம். IBPS Clerk Recruitment: வங்கிகளில் கிளர்க் வேலைவாய்ப்பு.. 10,277 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி?.!
பணி விபரங்கள் :
- பணி : ஜூனியர் அசோசியேட்
- காலிப்பணியிடங்கள் : 6,589
- தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் : 380
- கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு : 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மாத சம்பளம் : ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை
- விண்ணப்ப கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.750. எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
- தேர்வு முறை : முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, உள்ளூர் மொழி தேர்வு
- விண்ணப்பிக்க இறுதி நாள் : 26-08-2025
- மேலும் விபரங்களுக்கு : https://sbi.co.in/web/careers/current-openings
விண்ணப்பிப்பது எப்படி?
- தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் SBI அதிகாரபூர்வ இணையதளமான https://sbi.co.in/ அல்லது நேரடியாக https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
- அதன் பின் APPLY NOW என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
- பதிவு செய்யும்போது தேவையான விபரங்களை பிழையின்றி வழங்க வேண்டும்.
- விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்.
- இறுதியாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கு தயாராகலாம்.
- தேர்வு குறித்த அறிவிப்பினை படிக்க : https://sbi.co.in/documents/77530/52947104/JA+2025+-Detailed+Advt.pdf/8f7ff18f-1972-21c8-9212-5a8cf85a7099?t=1754398573326
தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற லேட்டஸ்ட்லி தமிழ் உங்களை வாழ்த்துகிறது.