Chennai Rains | File Pic (Photo Credit: @Unmai_Kasakkum X)

ஆகஸ்ட் 09, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம், கடலோர தமிழகம், இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் 9ம் தேதியான இன்று, வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது இன்றைய வானிலை (Today Weather) குறிப்பில் அறிவித்திருந்தது. State Education Policy: மாநில கல்விக் கொள்கை வெளியீடு: என்னென்ன அம்சங்கள்? முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை.. விபரம் உள்ளே.! 

கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை:

அதன்படி, நேற்று நள்ளிரவு பல மாவட்டங்களில் திடீர் கனமழையும் கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், மதியம் ஒரு மணி வரையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்கள் பின்வருமாறு.,

* ராமநாதபுரம்

* புதுக்கோட்டை

* கடலூர்

* விழுப்புரம்

* கள்ளக்குறிச்சி

* செங்கல்பட்டு மற்றும்

* புதுச்சேரி பகுதிகள்

இந்த பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு: