செப்டம்பர் 11, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழை தமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாக இருக்கிறது. தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 38 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக கரூர் பரமத்தி வேலூரில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், தெற்கு ஒரிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுகிறது.
இன்றைய வானிலை (Today Weather):
11ம் தேதியான இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களில், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி-மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 கிலோமீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசலாம். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Kallakurichi News: கள்ளகாதலனுடன் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மனைவி.. தலை துண்டித்து கொடூரமாக இரட்டைப் படுகொலை.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
12ஆம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி-மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகம் முதல் 40 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather):
தலைநகர் சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என்றாலும், ஒரு சில இடங்களில் திடீர் அசௌகரியம் ஏற்படும். தமிழக கடலோர பகுதி, வங்கக்கடல் பகுதிக்கு இன்று முதல் 13-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.