ஜூன் 27, சென்னை (Chennai News): வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அம்மாவட்டங்களில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பின் மீண்டும் நேற்று சென்னை வந்தார். அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) தொடர்பான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ரேஷன் கார்டு (Ration Card) இருக்கும் நபர், குடும்பத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு வங்கி கணக்கில் மாதம் உரிமை தொகையாக ரூ.1000 வரவு வைக்கப்படுகிறது. Gold Rate Today: 5 நாட்களில் ரூ.2000 அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?.. விபரம் இதோ.!
'உங்கள் ஸ்டாலின்' சிறப்பு முகாம் :
இந்த திட்டம் (Tamilnadu Govt Scheme) மகளிர் இடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதும் நடந்தது. இதனால் வேதனையில் இருந்த பெண்கள் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழக அரசும் சட்டப்பேரவையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து "உங்கள் ஸ்டாலின்" (Ungal Stalin) என்ற பெயரில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களும், கடந்த முறை விண்ணப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
45 நாட்களில் பயனர்களுக்கு முடிவு :
இதனிடையே ஜூலை 15 முதல் தரப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ.1000 வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பம் பெறப்பட்ட 45 நாட்களுக்குள் பயனாளர்களுக்கு அதன் முடிவுகளும் அறிவிக்கப்படும்.