நவம்பர் 16, கிளாம்பாக்கம் (Chennai News): கேரள மாநிலத்தில் உள்ள பம்பை, சபரிமலையில் உள்ள அய்யப்பன் (Sabarimala Swami Sri Ayyappa Temple) கோவிலுக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நாட்களில், தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் இலட்சக்கணக்கில் சென்று வருவார். கார்த்திகை 1ம் தேதியில் விரதத்தை தொடங்கி, ஒரு மண்டல விரதத்திற்கு பின்னர் பக்தர்களின் கூட்டம் என்பது சபரிமலையில் அலைமோதும். அதேபோல, கார்த்திகையில் ஒவ்வொரு நாளும் சபரிமலையில் மக்கள் குவிந்துவிடுவார்கள். இதனால் பக்தர்களுக்கு ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. Astrology: செவ்வாய் தோஷம் திருமணத்தின் போது ஏன் முக்கிய தோஷமாக பார்க்கப்படுகிறது? விஞ்ஞான உண்மை என்ன?!
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து (Chennai to Sabarimala Bus Service) பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேருந்துகள் 15.11.2024 முதல் 16.01.2025 வரை நாள்தோறும் இயக்கப்படும். 15.11.2024 முதல் 16.01.2025 வரை நாள்தோறும், இரவு 8.00 மணிக்கு மதுரையிலிருந்து உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக பம்பைக்கும், மாலை 05.30 மணிக்கு புதுச்சேரியிலிருந்து கடலூர், நெய்வேலி டவுன்சிப், விருதாச்சாலம், பெண்ணாடம், திட்டக்குடி வழியாக பம்பைக்கும், இரவு 09.00 மணிக்கு திருச்சியிலிருந்து திண்டுக்கல், தேனி வழியாக பம்பைக்கும் அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. Sabarimala Online Booking: சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. மகர விளக்கு பூஜை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.!
முன்பதிவு & பிற விபரங்களுக்கு:
மேலும், 60 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, http://tnstc.in என்ற இணையதளத்திலும் மற்றும் டிஎன்எஸ்டிசி (TNSTC) அதிகாரபூர்வ மொபைல் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.