CM MK Stalin on Irumbin Thonmai Book Release Event (Photo Credit: @MKStalin / @TNDIPR X)

ஜனவரி 23, கோட்டூர்புரம் (Chennai News): தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், இன்று காலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், "இரும்பின் தொன்மை" எனும் நூலை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி, கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

அறிவிப்புக்கு முன்னர் முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது,

"கல்தோன்றி மண்தோன்றாக்‌ காலத்தே வாளொடு முன்‌ தோன்றிய மூத்தகுடி நமது தமிழ்க்குடி'-என்று பெருமை பொங்க நாம்‌ சொன்னபோது வெற்றுப்‌ பெருமை பேசுகிறார்கள்‌ என்று, சிலர்‌ விமர்சித்தார்கள்‌. அதற்குக்‌ காரணம்‌, தமிழ்ச்‌ சமுதாயத்தில்‌ வந்து புகுந்த இழிவுகளும்‌ - அதனால்‌ ஏற்பட்ட தேக்க நிலையும்தான்‌ காரணம்‌! இந்த இடைக்கால இழிவுகள்‌ நீங்க காலம்தோறும்‌ எண்ணற்ற புரட்சியாளர்கள்‌ தோன்றினார்கள்‌. அய்யன்‌ வள்ளுவர்‌, வள்ளலார்‌ தொடங்கி அயோத்திதாசப்‌ பண்டிதர்‌ என அந்தப்‌ பட்டியல்‌ நீளமானது... அவர்களின்‌ தொடர்ச்சியாகதான்‌, பகுத்தறிவையும்‌ இனமான உணர்வையும்‌ ஊட்டினார்‌ தந்தை பெரியார்‌! TN Govt Announcemnt: மருந்துகள்‌ தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய்‌ ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு.! 

பண்பாட்டு ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டுக்‌ கிடந்த நமது தமிழினத்தை, "ஏ தாழ்ந்த தமிழகமே"-என்று பேரறிஞர்‌ அண்ணா அவர்கள்‌ தன்னுடைய சிந்தனையாலும்‌, நா நயத்தாலும்‌ தட்டியெழுப்பினார்‌! சங்க இலக்கியத்தில்‌ சொல்லப்பட்ட நம்முடைய வாழ்வியலை திராவிட இயக்க மேடைகள்தோறும்‌ எடுத்துச்‌ சொன்னோம்‌! இலக்கியங்கள்‌ படைத்தோம்‌. முத்தமிழறிஞர்‌ தலைவர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ "இமய வரம்பினிலே விரம்‌ சிரிக்கும்‌... இங்கு விணை நரம்பினிலே இசை துடிக்கும்‌... அதுவும்‌ மானம்‌ மானம்‌ என்றே முழங்கும்‌!"-என்று சங்கத்தமிழைச்‌ சாறெடுத்து, நம்முடைய

வரலாற்றை எடுத்துச்‌ சொன்னார்‌! ஆனால்‌, இந்த இலக்கியப்‌ பெருமைகளை மெய்பித்து, பரந்துபட்டு வாழ்ந்த தமிழினத்தின்‌ புதையுண்ட வரலாற்றை மீட்டெடுத்து, அறிவுலகத்துக்கு அறிவிக்கவேண்டும்‌ என்றும்‌; வரலாற்றுப்‌ படிப்பினைகள்‌ வழியாக, முன்னேறும்‌ நிகழ்காலத்தில்‌ இருந்து, மேலும்‌ சிறப்பான எதிர்காலத்துக்கு தமிழர்களை வழிநடத்த வேண்டும்‌ என்றும்‌, நம்முடைய உழைப்பை செலுத்தி வருகிறோம்‌! அந்த உணர்வோடுதான்‌ நாம்‌ இங்கு கூடியிருக்கிறோம்‌! ஐம்பெரும்‌ விழாவாக இந்த விழாவை நடத்திக்கொண்டு இருக்கிறோம்‌! என பேசினார்.

முக்கிய அறிவிப்பு:

தமிழ்‌ நிலப்பரப்பில்‌ இருந்துதான்‌ இரும்பின்‌ காலம்‌ தொடங்கியது! இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல. உலகிற்கே மீண்டும்‌ சொல்கிறேன்‌. தமிழ்‌ நிலப்பரப்பில்‌ இருந்துதான்‌ இரும்பின்‌ காலம்‌ தொடங்கியது என்ற மாபெரும்‌ மானுடவியல்‌ ஆய்வுப்‌ பிரகடனத்தை இந்த நிகழ்ச்சி வாயிலாக அறிவிக்கிறேன்‌! 4 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே 'உருக்கு இரும்பு தொழில்நுட்பம்‌ தமிழ்‌ நிலத்தில்‌ அறிமுகமாகிவிட்டது! இப்போது, தமிழ்நாட்டில்‌ மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள்‌ மூலம்‌ அண்மையில்‌ கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள்‌ இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு. 4000-ஆம்‌ ஆண்டின்‌ முதற்பகுதிக்குக்‌ கொண்டு சென்றிருக்கிறது. Thaipoosam Special: தைப்பூசம் 2025 - பழனி போக திட்டமா? சிறப்பு இரயில் சேவை அறிவிப்பு.!

தென்னிந்தியாவில்‌, குறிப்பாக தமிழ்நாட்டில்‌ 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு அறிமுகம்‌ ஆகியிருக்கிறது என்று என்று உறுதியாக சொல்லலாம்‌. இதை ஆய்வு முடிவுகளாகவே நான்‌ அறிவிக்கிறேன்‌. தமிழ்நாடு அரசு தொல்லியல்‌ துறையால்‌ மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில்‌ சேகரிக்கப்பட்ட மாதிரிகள்‌ உலகத்தின்‌ தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புனே நகரில்‌ இருக்கும்‌ பீர்பால்‌ சகானி தொல்‌ அறிவியல்‌ நிறுவனம்‌, அகமதாபாத்‌ நகரில்‌ இருக்கும்‌ இயற்பியல்‌ ஆராய்ச்சி ஆய்வகம்‌ ஆகிய தேசிய அளவில்‌ புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும்‌ பன்னாட்டு அளவில்‌ உயரிய நிறுவனமான அமெரிக்கா நாட்டின்‌ புளோரிடா மாநிலத்தில்‌ இருக்கும்‌ பீட்டா ஆய்வகத்துக்கும்‌ மாதிரிகள்‌, பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தேசிய நிறுவனங்களில்‌ பகுப்பாய்வுக்கும்‌, பீட்டா ஆய்வகத்தில்‌ கதிரியக்க காலப்‌ பகுப்பாய்வுக்கும்‌ ஒரே தாழியிலிருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம்‌. அதன் முடிவுகளே இங்கு ஆதாரமாக இணைக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, மானுடவியல்‌ ஆய்வு தொடர்பான அறிவிப்பை இங்கு வெளியிடுகிறேன் என கூறினார்.

தமிழர்களின் இரும்பு உருக்கும் முறை மற்றும் உலக பயன்பாடுகள் தொடர்பாக, அமெரிக்காவின் ஆராய்ச்சி நிறுவன சான்றிதழை வெளியிட்ட முதல்வர்:

இரும்பின் தொன்மை நூல் வெளியீடு விழாவில் முதல்வர் பேசிய காணொளி:

 

இரும்பின் தொன்மை நூல் வெளியீடு விழாவில், முதல்வர் முக ஸ்டாலின் பேசிய விபரம் பின்வருமாறு: