ஜூன் 29, சென்னை (Chennai): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி நாளைய வானிலை (Tomorrow Weather) முன்னறிவிப்பை பொறுத்தமட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை நகரில் 38.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கலில் 19 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை (Weather Update in Tamilnadu) முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தமட்டில், மேற்கு திசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக 29ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு:
30ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இரண்டாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்து ஐந்து நாட்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பை பொறுத்தவரையில், 29ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனைத்து இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இரண்டு டிகிரி முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகம் ஆகும். Toddler Crushed by Car: தாயுடன் விளையாடிய மகளின் உயிர் ஊசல்; கண்முன் நொடியில் நடந்த கொடூரம்.!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தமட்டில், தமிழக கடலோரப் பகுதிகளில் 29ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையும் வீசலாம்.
வங்கக்கடல் பகுதியில் 29ஆம் தேதி முதல் இரண்டாம் தேதிவரை வங்கக்கடலை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும். இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையும் வீசலாம். வங்கக்கடல் பகுதியில் 29ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரையில் வடமேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதி, தெற்கு மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதி, தென் மத்திய பகுதி, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டாம். இப்பகுதியில் மணிக்கு சூறைக்காற்று 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரையிலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதியில் 29 முதல் 3ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், அதன் வடக்கு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.