DPI Campus | Quarterly Exam Holiday 2024 (Photo Credit @Sunnewstamil / @News18Tamilnadu X)

செப்டம்பர் 25, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையின் (School Education Department) கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசுஉதவிபெறும், தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகளில் செப்.28ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதற்குப்பின் 4 நாட்கள் விடுமுறை (Quarterly Exam Holiday 2024) அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விடுமுறையை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டு இருந்தது. Gold Silver Price: புதிய உச்சம் தொட்டது தங்கம்., வெள்ளி விலை: ரூ.1 இலட்சத்தை தாண்டியது.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்.! 

அக்.06 வரை விடுமுறை நீட்டிப்பு:

இந்நிலையில், தமிழ்நாடு மாநில கல்விவாரியத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசுஉதவிபெறும் பள்ளிகளின் காலாண்டு விடுமுறை நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காலாண்டு விடுமுறை செப்.29, 30, அக்.1, அக்.2 ஆகிய நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்த நிலையில், விடுமுறை அக்.6 ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் காலாண்டு விடுமுறை அக்.06 ம் தேதி நிறைவுபெற்று, 07ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.