செப்டம்பர் 16, சென்னை (Chennai News): உலகளவில் நிலவி வரும் பொருளாதார பிரச்சனை, உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீனியம் போர் உட்பட பல்வேறு காரணங்களால் பதற்ற சூழல் அதிகரித்து இருக்கிறது. இதனால் உலகளவில் நிலவி வரும் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் என நிலையற்ற சூழல் ஒவ்வொரு நாடுகளையும் பல்வேறு விதமான பொருளாதார பிரச்சனைகளை எதிர்கொள்ள காரணமாக அமைகிறது. இதனால், இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. Celebrating Popcorn: மறக்க முடியாத சிற்றுண்டியில் ஒன்றான பாப்கார்ன்; கூகுளின் இன்றைய சிறப்பு டூடுல்.! விபரம் உள்ளே.!
10 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்த விலை:
கடந்த 2014ம் ஆண்டு வரையில் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்று 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்து சவரன் தங்கம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்க நகையை வாங்க நினைப்போர் தொடர்ந்து விலையேற்றத்தால் பரிதவித்து வருகின்றனர். மேலும், இந்த விலை மேலும் இரட்டிப்பாக வாய்ப்புகள் அதிகம் என நகை விற்பனையாளர்களும் தெரிவித்து வருகின்றனர். உலகளவில் நிலவும் பல்வேறு சூழல்களால், தங்கத்தின் விலை என்பது எதிர்காலத்தில் குறைய வாய்ப்புகளே இல்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இன்று (Gold Rate in Chennai) ரூ.56 ஆயிரத்தை கடந்தது:
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று ரூ.7000 க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.56,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.98,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரண ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7060 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.56,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டுமே ரூ.480 உயர்ந்த தங்கத்தின் விலையால், சவரன் தங்கம் விலை ரூ.56,480 என உயர்ந்து அதிர்ச்சியை தந்துள்ளது. அதேவேளையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் கிலோ வெள்ளியின் விலை ரூ.95,000 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விலை ஏற்றத்தை சந்தித்தது.