TN School Students (Photo Credit: @Anbil_Mahesh X)

ஜூலை 05, சென்னை (Chennai News): தமிழ்நாடு மாநில பள்ளி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2025-26 ஆம் கல்வியாண்டு மாணவ, மாணவிகளை உற்சாகமாக வரவேற்று தொடர்ந்து பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலில் மாணவ, மாணவிகள் மற்றும் குடும்பத்தினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையிலான விடுமுறை தேதிகள் இருக்கின்றன. வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு இணைந்து மூன்று தேதிகளாகவும் இந்த விடுமுறை வருகிறது. இதனால் குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும், நேரத்தை செலவழிக்கவும் அனைவரும் திட்டமிடலாம். அந்த பட்டியலை பின்வருமாறு நாம் பார்க்கலாம். நீங்களும் உங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட நினைத்தால் இந்த பட்டியல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வந்தே பாரத் இரயில் மோதி உடல் சிதறி பலி.. மனைவி, மகன் கண்முன் சோகம்.! 

பொதுவிடுமுறை பட்டியல் :

  • ஆகஸ்ட் 15 முதல் 17 வரை - (வெள்ளி சனி, ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தை தொடர்ந்து இரண்டு வார இறுதி நாட்கள்.
  • செப்டம்பர் 5 முதல் 7 வரை - (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபியை தொடர்ந்து இரண்டு நாட்கள் பொது விடுமுறை.
  • அக்டோபர் 18 முதல் 20 வரை - (சனி, ஞாயிறு, திங்கள் கிழமை) தீபாவளி திங்கட்கிழமை வரும் நிலையில் வெள்ளி இரவு முதல் பலரும் தங்களது பயணத்துக்கு திட்டமிடுவார்கள்.
  • டிசம்பர் 25 முதல் 27 வரை - (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் டிசம்பர் 25 வியாழக்கிழமை தொடங்கும் நிலையில், வெள்ளிக்கிழமையும் பெரும்பாலும் விடுமுறை விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27 விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி அக்டோபர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது.