பிப்ரவரி 02, ஆலங்குளம்: தென்காசி மாவட்டத்தில் (Tenkasi) உள்ள தெற்கு கரும்பனூர், சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனராஜ் (வயது 40). இவர் மெக்னீக்காக இருந்து வருகிறார். தன்ராஜின் மனுவை லிங்கேஸ்வரி. தம்பதிகளுக்கு விவேகா என்ற 8 வயது மகளும், சபீனா என்ற 6 வயது மகளும் இருக்கின்றனர்.
இவர்களில் விவேகா 3ம் வகுப்பும், சபீனா ஆலங்குளத்தில் (Alangulam) செயல்பட்டு வரும் தனியார் நர்சரி பள்ளியில் (Nursary School) யூ.கே.ஜி-யும் (UKG Class) பயின்று வந்துள்ளனர். நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு சென்ற சபீனா, மாலையில் வீட்டிற்கு புறப்பட்டு வந்துகொண்டு இருந்துள்ளார். பள்ளிக்கூடத்து வேனில் (School Van) அவர் பயணித்துள்ளார்.
அச்சமயம் சபீனாவை அவரின் வீட்டருகே வாகனத்தை நிறுத்தி இறக்கிவிடாமல், முந்தைய நிறுத்தத்தில் இறங்கிய மற்றொரு சிறுமியோடு சபீனாவையும் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். அங்கிருந்து வேன் புறப்பட்டபோது, திடீரென நிலைதடுமாறிய சபீனா வேனின் சக்கரத்தில் விழுந்துள்ளார். Erode By Poll PanneerSelvam Candidate: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த ஓ.பன்னீர் செல்வம்.. பாஜகவின் ஆதரவு யாருக்கு?..!
இதனால் அவரின் மீது வேன் சக்கரம் ஏறி இறங்கவே, தலை நசுங்கி சபீனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்கள் அவரின் உடலை கண்டு கதறியழுதனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ஆலங்குளம் காவல் துறையினர், வேன் ஓட்டுநராக ஆலங்குளம் ஜோதி நகரில் வசித்து வரும் மாடசாமியின் மகன் ஸ்ரீராம்குமாரை (வயது 33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீராம் குமாரே நர்சரி பள்ளியை நடத்தி வந்த நிலையில், அவரே சிறுமிகளை வேனில் அழைத்து வந்து மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விட்டுவருவது உறுதியானது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.