நவம்பர் 29, கடையநல்லூர் (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் (Kadayanallur, Tenkasi), கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவரின் மகன் லட்சுமணன் (வயது 35). திமுகவில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்ட லட்சுமணன், அப்பகுதியில் முக்கியப்புள்ளியாக வலம்வந்துள்ளார். மேலும், கிருஷ்ணாபுரம் பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் கணினி மையத்தை நடத்தியும் வருகிறார்.
இவரிடம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் பாண்டியராஜன் மற்றும் பாலமுருகன் ஆகியோர், தமிழ்நாடு அரசுப்பணியில் வேலைபெற்றுத்தர வேண்டி ரூ.8 இலட்சம் பணம் கொடுத்துள்ளனர். அவ்வப்போது சந்தித்த நட்பின் அடிப்படையில், அரசு வேலைவாங்கித்தருவதாக லட்சுமணன் இருவரிடமும் கூறி இருக்கிறார்.
இதன்பேரில் எழுந்த நம்பிக்கையில் இருவரும் தலா ரூ.4 இலட்சம் வீதம் பணம் கொடுத்துள்ளனர். இதனைப்போல, சண்முகநாதனின் மகள் சித்ரா என்பவரும் ரூ.4 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. Rajini’s Muthu Kamal ‘s Aalavandhan Movie Re Release:ரஜினிகாந்தின் முத்து, கமலின் ஆளவந்தான் திரைப்படங்கள் ஒரேநாளில் ரீ-ரிலீஸ்: கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்.!
பணம் கொடுத்தவர்கள் பணியானை கேட்டு தொல்லை செய்ய, பணம் வாங்கிய மூவரையும் அமைதிப்படுத்த சுயமாக பணியாணையை தயாரித்து லட்சுமணன் வழங்கி இருக்கிறார். இத்தனைபெற்றுக்கொண்ட மூவரும் பணியிடத்திற்கு சென்றபோது, போலியான பணியானை எடுத்து வந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் லட்சுமணனின் மோசடி செயல் வெளிச்சத்திற்கு வந்தது. உண்மையை உறுதிசெய்த அதிகாரிகள், திமுக பிரமுகரான லட்சுமணனை கைது செய்தனர்.
அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.