Rajinikanth's Muthu Movie | Kamal Hassan's Alavandan Movie Poster (Photo Credit: @Rameshbabu X)

நவம்பர் 28, சென்னை (Cinema News): கடந்த 1995 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் (Director K.S Ravikumar) இயக்கத்தில், கவிதாலயா ப்ரொடெக்சன்ஸ் (Kavithalayaa Productions) தயாரிப்பில், நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), மீனா (Actress Meena), சரத் பாபு, ராதாரவி (Radha Ravi), செந்தில், வடிவேலு (Vadivelu), ஜெயபாரதி, சுபஸ்ரீ, பொன்னம்பலம் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் முத்து (Muthu). இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் (A.R Rahman) இசையமைத்திருந்தார், பாடல்கள் வைரமுத்துவின் (Poet Vairamuthu) வரிகளில் உருவாகி இருந்தது.

1994-ல் மலையாளத்தில் வெளியான தேன்மாவின் கொம்பத்து என்ற திரைப்படத்தின் தமிழாக்கமாக உருவாகிய முத்து, ரஜினியின் திரைப்பட வாழ்வில் மிக முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இப்படத்திற்கு பின்னரே ரஜினிகாந்துக்கு ஜப்பான், சீனா போன்ற நாடுகளிலும் பெருவாரியான ரசிகர்கள் கிடைத்தனர்.

முத்து திரைப்படம் மலேஷிய, சீன, ஜப்பானிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழக அளவில் மட்டுமல்லாது, உலகளவிலும் படம் ஏகபோக வரவேற்பு பெற்றது. அன்றைய மதிப்பில் லட்சங்கள் செலவில் தயாரிக்கப்பட்ட முத்து திரைப்படம், ரூபாய் 13 கோடியை கடந்து வசூல் சாதனை செய்திருந்தது. Karthikai Deepam in Nilgiris: நஞ்சநாட்டில் பழங்குடியின முறைப்படி சிறப்பிக்கப்பட்ட கார்த்திகை தீபத்திருநாள்: அசத்தல் வீடியோ இதோ.! 

எம்.ஜி.ஆருக்கு பின் கடல் கடந்து ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் முத்து நல்ல வரவேற்பை பெற்றது. முத்து திரைப்படத்தின் ஜப்பான் வசூல் வேட்டையை, பல ஆண்டுகள் கழித்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மட்டுமே முறியடித்து இருந்தது. இந்நிலையில், இப்படம் வரும் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி தொழில்நுட்பத்தில் புதுமை புகுத்தப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அதேபோல, கடந்த 2001 ஆம் ஆண்டு தானுவின் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா (Director Suresh Krishna) இயக்கத்தில், கமல்ஹாசன் (Kamal Hassan) இரட்டை வேடத்தில் நடித்து வழங்கிய ஆளவந்தான் (Aalavandhan Tamil Movie) திரைப்படம், கமலின் திரையுலக பயணத்தில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், ரவீனா, மனிஷா கொய்ராலா, சரத்பாபு, கொல்லம்பட்டி மாருதி உட்பட பலரும் நடித்திருந்தனர். இப்படம் தேசிய அளவிலான விருதையும் வென்றது. ரூபாய் 25 கோடி பட்ஜெட்டில் உருவான ஆளவந்தான் திரைப்படம், கமலை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ரசிகர்களுக்கு காண்பித்து நல்ல வெற்றியை அடைந்தது.

இந்தத் திரைப்படமும் டிசம்பர் எட்டாம் தேதி, உலகளவில் ஆயிரம் திரையரங்குகளில் மீண்டும் மறு பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பின் ரஜினி மற்றும் கமல் திரைப்படங்கள் ஒரேநாளில் ரீரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட பாட்ஷா திரைப்படம், சென்னையில் மட்டும் 108 காட்சிகள் திரையிடப்பட்டு, ஒரு வாரத்தில் ரூ.36 இலட்சத்தை கடந்து வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.