Kadayanallur Accident (Visuals From Spot)

ஜனவரி 18, கடையநல்லூர்: தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் (Kadayanallur, Tenkasi), குமந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பத்ரகாளி (வயது 36), சூர்யா (வயது 23). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். நேற்று மதியம் 3 மணியளவில் பத்ரகாளியின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பத்திரிகை வைக்க, மச்சானின் மகன் சூர்யாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளார்.

அப்போது, குமந்தாபுரத்தில் இருக்கும் உறவினரின் வீட்டில் பத்திரிகையை வைத்துவிட்டு, கொல்லம் - திருமங்கலம் (Kollam - Thirumangalam National Highway) தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்துள்ளனர். இவர்கள் குமந்தாபுரம் துர்கா தேநீர் கடை அருகில் வந்துகொண்டு இருந்துள்ளனர். Pest in Liquor: “சாகத்தான் குடிக்கிறன், அதிலும் பூச்சியா?”.. விரக்தியில் பொங்கி மாற்று மதுபானம் வாங்கி ஊற்றிய குடிமகன்.. வைரல் வீடியோ.! 

அச்சமயம் எதிர்திசையில் மதுபோதையில் TN 72 BA 6215 பதிவெண் கொண்ட நிசான் காரை இயக்கி வந்த புளியங்குடியை சேர்ந்த யாசீர் அரபாத் (வயது 35), இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர்கள் (Car Collision With Two Wheeler) மீது வாகனத்தை மோதியுள்ளார். இந்த விபத்தில் பத்ரகாளி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக பலியாகினார்.

சூர்யாவின் 2 கால் எலும்புகளும் முறிந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், விரைந்து வந்து சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கிருந்து அவர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள குமந்தாபுரம் காவல் துறையினர், மதுபோதையில் காரை இயக்கிய யாசீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 18, 2023 09:37 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).