
மார்ச் 18, நெல்லை (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஜாகிர் உசேன் (Zakir Husain). இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாவலராக பணியாற்றியவர் ஆவார். தற்போது ஓய்வுக்கு பின்னர் சமூக ஆர்வலராகவும், உதவிகள் செய்யும் நபராகவும் இருந்து வந்துள்ளார். இன்று காலை தொழுகை முடித்துவிட்டது வரும்போது, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. ஜாகிர் உசேன் கொலை வழக்கு விஷயத்தில், அவர் வக்பு வாரிய முறைகேடு மற்றும் இஸ்லாமிய சொத்துக்கள் முறைகேடுகளை எதிர்த்து போராடியதால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடக்கிறது. இதனிடையே ஜாகிர் உசேன் மரணத்துக்கு முன்பு பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. Kattumannarkoil News: செல்போன் பார்க்க தாய் அனுமதிக்காததால் விபரிதம்; 14 வயது சிறுமி தற்கொலை.!
ஜாகிர் உசேன் பேசிய காணொளியில் கூறியது:
அந்த வீடியோவில், "தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.. தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களைப்போல, நல்லுள்ளதுடன், என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன். நெல்லை நகரம், தொட்டிபாளையம் தெருவில் வசித்து வருகிறேன். மரணிக்கும் தருவாயில் நான் என்னால் இயன்ற உதவியை செய்கிறேன். என் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 20 முதல் 30 பேர் சேர்ந்து, என்னை கொலை செய்ய வேண்டும் என இருக்கிறார்கள். இதில் முக்கிய நபர் டொபி. கொலை மிரட்டலுக்கு முக்கிய காரணம் நெல்லை நகரம் காவல் ஆய்வாளர் கோபால கிருஷ்ணன், உதவி காவல் ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் தான். நான் கொடுத்த புகார்களை ஒன்று சேர்ப்பது இவர்கள் தான். முஸ்லீம் தௌபீக் தன்னை இந்து என கூறி, இந்து பெயரை பயன்படுத்தி என் மீது வழக்கு கொடுத்து, பிசிஆர் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வக்பு சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்ட்டுள்ளன. எப்படியும் என்னை கொலை செய்திடுவார்கள் என்பது தெரியும்" என அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனிமவளக்கொள்ளையை எதிர்த்து போராடிய சமூக ஆர்வலர், அதிமுக நிர்வாகி ஜெகபர் அலி கொலை செய்யப்பட்டார். அந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சோகம் நடந்துள்ளது.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜாகிர் உசேன் பேசிய காணொளி:
கொலைக்கு முன் ஜாகிர் உசேன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ#malaimurasu #malaimurasuseithigal #death #virel #tirunelveli pic.twitter.com/wnDy9FCQyN
— Malaimurasu TV (@MalaimurasuTv) March 18, 2025
உசேன் கொலை செய்யப்பட்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட காணொளி:
வக்ஃப் சொத்தை பாதுகாக்க போராடிய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் படுகொலை, ரமலான் மாதத்தில் பஜர் தொழுதுவிட்டு பள்ளியை விட்டு வெளியில் வரும்போது கொலை செய்திருக்கிறார்கள்.
"நான் கொலை செய்யப்படலாம்" அதற்கு காவல்துறையே காரணம் என அவர் பேசிய காணொளி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது pic.twitter.com/YlTMTCpzxB
— தாய்த்தமிழ் (@ThaaiThamizh) March 18, 2025