மார்ச் 27, தண்டையார்பேட்டை (Chennai News): சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் மாநகராட்சி நவீன விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சுமார் 45 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நேற்று காலையில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக ஆர்.கே. நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பின்னர், பிரேதத்தை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். Forest Department Purchased Private Forests: தனியார் பட்டா காடுகளை விலைக்கு வாங்கிய வனத்துறை – வனப்பகுதி அதிகரிப்பு..!
இதுதொடர்பாக, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளது தெரியவந்தது. இவர் பெயர் முகேஷ் (வயது 53). கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காட்டுநாயக்கன்பள்ளியைச் சேர்ந்தவர் ஆவார். இவருடைய முன்பக்க உதடு, இடது கண் என முகத்தில் ரத்த காயங்களும் இருந்தது. மேலும், கான்கிரீட் கல்லை கொண்டு தாக்கி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆர்.கே. நகர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சம்பவ இடத்தில் இரவு நேரங்களில் மது அருந்துவதற்காக வரும் சிலர் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதனை தட்டி கேட்டபோது முகேஷ் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.