Dussehra (Photo Credit: Instagram)

அக்டோபர் 03, குலசேகரன்பட்டினம் (Thiruchendur News): தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். மதுரை மீனாட்சி அம்மன் ஆட்சி செய்வதை போல இங்கு முத்தாரம்மன் குலசையை ஆட்சி செய்து வருகின்றார் என மக்கள் நம்புகின்றனர். இந்தாண்டுக்கான தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்காரம் வரும் 12ஆம் தேதி நள்ளிரவு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர். தசரா திருவிழாவில் (Dussehra festival) குலசை மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். Marburg Virus Scare: வேகமாக பரவும் மார்பர்க் வைரஸ்.. மிரளும் உலக நாடுகள்..!

12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். இந்த திருவிழாவுக்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி, மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். காளி அம்மன், விநாயகர், முருகன் என கடவுள்களின் வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.