மே 27, சென்னை (Technology News): லாவா தனது புதிய பட்ஜெட் மொபைலான லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G Smart Phone) ஸ்மார்ட்போனை, கடந்த வாரம் amazon இணையதளம் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தள பக்கங்களில் விரைவில் வரவிருப்பதை மறைமுகமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், Lava Yuva 5G ஸ்மார்ட் போன வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்திய சந்தையில் மே 30-ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது, லாவா நிறுவனம் அதன் டீஸர் வீடியோவை வெளியிட்டு, அதன் வடிவமைப்பையும் வெளியிட்டுள்ளது. Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாட்டால் உடலில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன..! முழு விவரம் உள்ளே..!
வெளியீட்டு தேதி மற்றும் வடிவமைப்பு:
லாவா யுவா 5ஜி வெளியீட்டு தேதி சமூக ஊடக தளமான X-யில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட் போன் மே 30-ஆம் தேதி அன்று மதியம் 12:00 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. டீஸர் வீடியோவில் போனின் முன்பபுறம் மற்றும் பின்புறம் உள்ளது. முன் பேனலில், பஞ்ச் ஹோல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின் பேனலில் பெரிய வட்ட வடிவ கேமரா அமைப்பு, இதில் நான்கு கேமரா கட்அவுட்கள் உள்ளன. முதல் இரண்டு கட் அவுட்களில் ஒரு கேமரா மற்றும் AI மற்றும் மற்றொன்றில் LED ப்ளாஷ் கொடுக்கப்பட்டுள்ளது. மொபைலின் கேமரா அமைப்பின் நடுவில் 50MP பிராண்டிங் உள்ளது.
மேட் ஃபினிஷ் கொண்ட பிரீமியம் கிளாஸ் பேக்கால் ஆனது. இது நீலம் மற்றும் பச்சை என இரண்டு வண்ணங்களில் உள்ளது. போனின் வலது பக்கத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்களைக் காணலாம். அதில் கைரேகை சென்சாரும் உள்ளது. இது தவிர, போனின் அடிப்பகுதியில் USB Type C போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது.
விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்பின் படி):
லாவா யுவா 5ஜி ஸ்மார்ட் போனை ஆண்ட்ராய்டு 14 உடன் வழங்கலாம். இதில் MediaTek Dimensity செயலி கொடுக்கப்படலாம். விவரங்களில் சிப்செட் குறிப்பிடப்படவில்லை என்றாலும், Dimensity 6300 அல்லது Dimensity 6080 உடன் வரலாம். புதிய ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில், 6GB மற்றும் 8GB ரேம் கொடுக்கலாம். இதன் மூலம் 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் வரக்கூடும். மேலும், இதில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு டீசரில் காண்பிக்கப்பட்டதுபோல், இதில் 50MP AI முதன்மை கேமரா, 16MP செல்பி கேமரா இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதுவரை இதன் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Lava Yuva 5G is set to launch on May 30, 2024 in India. pic.twitter.com/PNVTuukvig
— Oneily Gadget (@OneilyGadget) May 26, 2024