பிப்ரவரி 14, திருவண்ணாமலை (Tiruvannamalai): தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி (வயது 23). இவர் ஏலகிரி மலையில் கல்வி கற்று பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர்க்கு படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமாகிவிட்டது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வு நடைபெற்றது. அப்போது, ஸ்ரீபதி பிரசவமாக இருந்தார். அவர்க்கு தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்து விட்டது. ஆனாலும், குழந்தை பிறந்த 2 -வது நாளில் தேர்வு எழுதினர். Bubonic Plague: கொரானாவை விட கொடூரம்... 5 கோடி மக்களை கொன்று குவித்த வைரஸ்.. மக்களுக்கு எச்சரிக்கை..!

இந்நிலையில், சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதன் மூலம் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.