ஏப்ரல் 01, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறையை சேர்ந்த மணிபாரதி (வயது 26) என்பவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவ நாள் அன்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு நடந்து வந்துகொண்டிருக்கும்போது, திடீரென வந்த 4 மர்ம நபர்கள் (The Robbers Who Stole Money) மணிபாரதியை சுற்றி வளைத்தனர். அவரை அடித்து தாக்கி அவரிடம் இருந்த 480 ரூபாயை பறித்துள்ளனர். இதனையடுத்து, அவருடைய செல்போனை பறிக்க முயற்சிக்கும் போது, தப்பி ஓடி அங்கு ரோந்து பணியில் இருந்த தெற்கு காவல்துறையினரிடம் தகவல் அளித்துள்ளார். Woman Murder: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண் – கத்தியால் குத்தி கொலை செய்த ஓட்டுநர்..!
தகவலின் பேரில் வந்த காவல்துறையினர், வழிப்பறி செய்த கொள்ளையர்கள் 4 பேரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த அப்துல்ரஹீம் (வயது 19), வண்டிக்கார தெருவை சேர்ந்த சதீஷ் (வயது 19), ஜெபமாலைபுரம் முகமது ரோஷன் (வயது 20) மற்றும் ஒக்கநாடு கீழையூர் வருண் (வயது 20) ஆகிய நான்கு பெரும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக, காவல்துறையினர் அவர்கள் நான்கு பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த இரு சக்கர வாகனம் மற்றும் பணம் முதலியவற்றை பறிமுதல் செய்தனர்.