Saving Schemes (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 11, புதுடெல்லி (Technology News): வாழ்க்கை வாழ்வதற்கு தேவையான ஒன்று பணம். ஆனால் பணம் மட்டுமே மகிழ்ச்சியை முழுவதுமாக தராது. மனிதர்களுக்கு பணத்தின் மீதான ஆசை ஒருபோதும் குறையாது. வாழ்க்கையில் பணம் ஒருபங்கு சந்தோஷத்தை மட்டுமே தரும். இருப்பினும் கவலையின்றி மன அமைதியாக வாழ தேவையான அளவு பணம் சம்பாதித்து, அதை எதிர்காலத்திற்கு சேமித்தும் வைக்க வேண்டும்.

கடனில்லாத வாழ்க்கை:

கவலையின்றி வாழ்வதற்கு கடன்கள் இல்லாமல் இருந்தாலே போதும். அதிக கடன் இருப்பதும், உடனடி பணத் தேவையை சரி செய்ய தேவையான அளவு நிதி இருக்கும் பட்சத்தில் மன உளைச்சல் இல்லாமல் வாழ்க்கையை நடத்தலாம். அதைத் தவிர்த்து பணத்திற்கும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. பணத்தினால் ஏற்படும் நிம்மதி அதை பயன்படுத்தும் விதத்தில் தான் உள்ளது. பணம் இல்லாதவர்களை விட கடன் உள்ளவர்களே பெரும்பாலும் மன அமைதியின்றி இருக்கின்றனர். Infosys Layoffs: திடீரென 400 பேரை பணிநீக்கம் செய்த இன்ஃபோசிஸ்.. காரணம் என்ன? அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

நிம்மதி தரும் பணம்:

அதிகமாக சம்பாதிப்பவர்கள் சரியான முறையில் சேமிப்பும் செலவையும் மேற்கொள்ளவில்லை எனில் பணம் இருந்தும் கவலையுடன் தான் இருப்பார்கள். பணம் ஒரு நிலையற்ற பொருளாகும் அதை எவ்வாறு எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக மாற்றலாம் என சிந்தித்து சேமிப்பை மேற்கொள்ள வேண்டும். பெரும்பான்மையானவருக்கு இருக்கும் முதல் பயமே எதிர்காலத்தில் நம் நிதி நிலை எப்படி இருக்கும் என்பது தான். அக்கவலைக்கு சேமிப்பும், முதலீடுமே தீர்வாகும்.

எளிய வாழ்க்கைL

எளிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்பவர்களுக்கு பணம் இருந்தாலும் இல்லாவிடினும் மனதில் அமைதி இருக்கும். தங்கள் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்பவர்களுக்கு அதிக பணத் தேவை ஏற்படாது. இதனால் கடனோ, நிதி நெருக்கடியோ ஏற்படாது. சேமிப்பிலும் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யவும் கவனத்தை செலுத்தலாம்.

பிறரை போல இருக்க கூடாது:

தற்போது உள்ள இணைய உலகில் தங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதிலேயே தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு இருக்கின்றனர். பிறர் முன் ஆடம்பரமாக வாழ நினைத்து அளவிற்கு மீறி செலவு செய்யக் கூடாது. மேலும் மற்றவர்களை போல ஆக வேண்டும் என பிறருடன் ஒப்பிட்டு வீண் செலவுகள் செய்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ முடியாது.

மகிழ்ச்சிக்கான செலவு:

மகிழ்ச்சியாக வாழ சேமிப்பும் முதலீடும் செய்வது போல தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்பங்களுக்கு செலவு செய்வதும், அவ்வப்போது சுற்றுலா செல்ல கூட மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் அதற்காக பொருளாதார சூழ்நிலை சரியில்லாத சமயத்தில் இவைகள் செய்வதை தவிர்க்கலாம். பொருளாதார சூழ்நிலை மேம்பட்டு வந்தபிறகு இது போன்ற பிற விஷயங்களுக்கு கவனத்தை செலுத்தலாம். மேலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பமாக சேர்ந்து கடன் அடைப்பதும், ஒன்று சேர்த்து சேமித்து வைப்பதும் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வழிநடத்தும்.