ஜனவரி 24, காஞ்சிபுரம் (Kanchipuram): காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் நோபல் பரிசு பெற்ற காலநிலை, மற்றும் சுற்றுசூழல் நிபுணரான கலாநிதி மொஹான் முனசிங்க (Mohan Munasinghe), சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். Shruti Haasan To Star In Indo-UK Movie: சர்வதேச படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன்.. சமந்தாவின் வாய்ப்பை தட்டி தூக்கிய ஸ்ருதி..!
அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "வளர்ந்த நாடுகள் இயற்கை வளங்களை அதிகமாக நுகர்வதால் பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, உலகின் தென் பகுதியில் அமைந்துள்ள ஏழை நாடுகள் அதிகம் பாதிக்கப்படும். அழிவை ஏற்படுத்த ஆயுதங்களுக்கு செலவிடப்படும் தொகை 2 டிரில்லியன் டாலர்கள். ஆனால் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக செலவிடப்படும் தொகை மிகவும் குறைவு" என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க உலக நாடுகளும், தலைவர்களும், குடிமக்களும் தவறினால், 2050-ம் ஆண்டுக்குள் பூமியின் பெரும் பகுதி அழிந்து விடும். மற்றும் பல இனங்கள் அழியும் அபாயம் உள்ளது. உலகம் 2100-ல் மழைக்காடுகளும், 2050-ல் உணவும், 2048-ல் மீன்களும், 2040ல் தண்ணீரும் இல்லாமல் போகலாம்." என்று தெரிவித்தார்.