Rain (Photo Credit: Pexels)

ஜனவரி 12, சென்னை (Chennai): தமிழகத்தில் பொதுவாக வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபரில் தொடங்கி டிசம்பரில் நிறைவடைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு இன்னமும் பெய்கிறது. அதிலும் வழக்கத்தை விட இந்த பருவநிலையில் வரலாறு காணாத கனமழை வட மற்றும் தென் மாவட்டங்களில் பெய்தது. இதனால் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். Amazon Audible Layoff: தொடரும் பணிநீக்க நடவடிக்கை; களத்தில் இறங்கிய அமேசான்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

விடைபெறும் வடகிழக்கு பருவமழை: இந்நிலையில் ஜனவரி 15 உடன் இந்த மழையின் தீவிரம் குறையத் தொடங்கும் எனவும் வடகிழக்கு பருவமழை அத்துடன் விடைபெற இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யயும். அதன்படி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் சிறிது நாட்களில் விடைபெறும்" என்று தெரிவித்துள்ளது.