அக்டோபர் 04, திருப்பூர் (Tirupur News): திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழில் நிமித்தமாக நைஜீரிய (Nigeria) நாட்டினர் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இவ்வாறு திருப்பூர் வரும் நைஜீரியர்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதை கண்டறிந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து வருகிறார்கள். அதன்படி, திருப்பூர் வடக்கு காவல்துறையினர் நேற்றிரவு (அக்டோபர் 03) சூசையாபுரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். TN Weather Update: வேகமெடுக்கும் வடகிழக்கு பருவமழை.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
அப்போது, அந்த வழியாக வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரிடம் விசாரித்தனர். அவருடைய பாஸ்போர்ட் (Passport), விசா (Visa) உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தபோது, அவரிடம் ஆவணங்களுக்கான நகல் மட்டுமே இருந்தது. மேலும், அவர் நாமக்கல்லில் இருந்து தினந்தோறும் திருப்பூர் வந்து பனியன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் நான்சோ (வயது 41) என்பவரை வடக்கு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.