AC helmets for traffic Police (Photo Credit: YouTube)

மார்ச் 04, சென்னை (Chennai News): கோடைகாலம் (Summer Season) தொடங்கி விட்டதால் வெயில் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில், கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், ஆவடி (Avadi) காவல் ஆணையரக போக்குவரத்து காவலர்களுக்கு, காவல் ஆணையர் சங்கர் ஏசி ஹெல்மெட்டை வழங்கினார். Dayalu Ammal Hospitalised: தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி.. நேரில் சென்றார் முதல்வர் ஸ்டாலின்..!

ஏசி ஹெல்மெட்:

கொளுத்தும் வெயிலில் வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் 50க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர், கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி ஆகியோர் ஏசி ஹெல்மெட்டை (AC Helmet) வழங்கி சிறப்பித்தனர். மேலும், நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டது.