செப்டம்பர் 27, சென்னை (Chennai News): ஒவ்வொரு வார இறுதி நாட்களில் சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி பணியாற்றுவோர் சொந்த ஊர் சென்று திரும்ப எதுவாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த வாரம், வார இறுதி நாட்களுடன், காலாண்டு தேர்வு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் பேருந்துகளில் வெளியூர்களுக்கு பயணிப்போரின் கூட்டம் அலைமோதும். இதனால் அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு & வார இறுதி விடுமுறை:
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வெள்ளிக்கிழமை 27ஆம் தேதி, சனிக்கிழமை 28ஆம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 29ஆம் தேதி வார விடுமுறை மற்றும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்தும், இதர இடங்களில் இருந்தும் கூடுதலாக பயணிகள் தமிழக முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. Child Sold By Father: பெற்ற குழந்தையை விற்ற தந்தை.. 6-வதாக பிறந்த குழந்தையை விற்க முயன்றபோது கைது..!
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 395 பேருந்துகளும், 28ஆம் தேதி சனிக்கிழமை 345 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 70 பேருந்துகளும், சனிக்கிழமை 70 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பெங்களூர், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யுங்க:
மாதவரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊரிலிருந்து சென்னை வருவோர் வசதிக்காக, சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கிக் கொள்ளவும் மண்டல வாரியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க, அரசின் www.tnstc.in என்ற பக்கத்தில் பயணசீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.