ஜூலை 23, கோயம்புத்தூர் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நேற்று நடைபெற்ற 21-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் (CSG Vs TGC) அணிகள் மோதின. Son-in-Law Was Murdered: மருமகனை திட்டமிட்டு கொலை செய்த பெண் வீட்டார்; மாமனார், மாமியார் உட்பட 8 பேர் கைது..!
இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் ஆகிய இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சந்தோஷ் குமார் 56 ரன்களிலும், ஜெகதீசன் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஆடிய வீரர்கள் சீரான ரன்களை எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. திருச்சி அணியில் அதிகபட்சமாக ராஜ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர், 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்கியது. அதன்படி, திருச்சி அணியின் வீரர்களான வாஷீம் அகமது 48 ரன்களும், ஆர் ராஜ்குமார் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஆடிய ஜாபர் ஜமால் 52 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை அபிஷேக் தன்வர் பெற்று சென்றார்.
Pradosh பிடிச்சது Catch-ஆ இல்ல Match-ஆ? 🤯🔥
Catch of the Season-ஆ இது இருக்குமா? 👀
📺 தொடர்ந்து காணுங்கள் TNPL | Trichy Grand Cholas vs Chepauk Super Gillies, Star Sports தமிழில் மட்டும்
#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/aU7pmdmjUF
— Star Sports Tamil (@StarSportsTamil) July 22, 2024