Robbery (photo Credit: Pixabay)

பிப்ரவரி 19, சென்னை (Chennai News): மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஆஷல் பேம் (வயது 24) என்பவர், சென்னையில் உள்ள சைதாப்பேட்டை (Saidapet) பகுதியில் அமைந்துள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி 05ஆம் தேதி பணி முடிந்து, தனது அறைக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, இளம்பெண்ணுடன் வந்த வாலிபர் ஒருவர், முகவரி கேட்பது போல் ஆஷல் பேம் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். Woman Gang Rape Case: கணவரை கட்டிப்போட்டு, மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை; 3 பேர் கைது..!

வழிப்பறியில் ஈடுபட்ட காதல் ஜோடி:

இதுகுறித்து ஆஷல் பேம், குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மதுரவாயல் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 19) என்பதும், அவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், சூர்யா பகல் நேரத்தில் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரவு நேரத்தில் தனது காதலியான சுஜித்ரா (வயது 20) உடன் சேர்ந்து இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களை குறிவைத்து, தொடர் வழிப்பறி (Robbery) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

காதலியுடன் வாலிபர் கைது:

அதே வேளையில், சூர்யா மீது பைக் திருட்டு மற்றும் கோயில் உண்டியல் திருட்டு என 20க்கும் மேற்பட்ட வழக்குகள், பல்வேறு காவல்நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. சூர்யா, திருட்டு தொழிலை 17 வயதில் இருந்து செய்துவந்ததும் விசாரணையில் வெளிவந்தது. அதனைத்தொடர்ந்து, சூர்யா மற்றும் அவரது காதலி சுஜித்ராவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.