Water Bottle Cattle (Photo Credit: Pixabay)

ஜனவரி 27, சென்னை (Health Tips): நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம். இந்த முதுமொழியின் அர்த்தம், நீர் இல்லாமல் இந்த உலகின் எந்த ஒரு விஷயமும் அமையாது என்பதே. ஏனெனில், உலகில் உயிரின் முதல் ஆதாரப்பெருக்கம் என்பது நீரில் இருந்து தொடங்கி, பின் நிலத்துக்கு வந்து பரிணாம வளர்ச்சி அடைந்ததுதான். நாம் உண்ணும் உணவில் இருந்து, பழங்கள்-காய்கறிகள் என எதை எடுத்துக்கொண்டாலும் அதில் நீர்சத்து இருக்கிறது.

நீரின்றி அமையாது உலகு (Neerindri Amaiyathu Ulagu):

உணவை நாம் சமைக்கும்போது, நீர் அல்லது எண்ணெய் என திரவ வடிவிலான பொருட்களை சேர்த்தே சமைக்கிறோம். உயிர்களின் உருவாக்கமும் நீர் போன்ற அணுக்களைப்பெற்ற திரவ வடிவத்தில் இருந்தே உருப்பெறுகிறது. தாயின் கருவறைக்குள்ளும் நீர் தான் நம்மை பாதுகாக்கிறது. அதனால்தான் நீர் இல்லாமல் உலகமும், உடலும் இயங்காது என்பதை வள்ளுவர் அன்றே புரிந்துகொண்டு, தனது உலகப்பொதுமறை நூலில் நீர் இன்றி அமையாது உலகு என எடுத்துரைத்தார். Health Tips: முட்டை வேக வைத்த நீரில் இவ்வுளவு நன்மைகளா? அசத்தல் தகவல் இதோ.! 

பாக்டீரியா வளரும்:

நமது உடல் மொத்தமாக 60% நீரை கொண்டது. இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். சுத்தமான கிருமிகளை உடலில் தக்கவைக்கவும், கேடான கிருமிகளை உடலிலிருந்து வெளியேற்ற்றவும் நீர் முக்கியத்துவம் பெறுகிறது. சுத்தமான, நல்ல குடிநீருக்கு என சுவை, ணம், தரம் இருக்கிறது. இது அதிக வெப்பம் இருக்கும் இடத்தில் நீரில் பாக்டீரியா கிருமிகள் வளரவும், நேரடி சூரிய ஒளி இருந்தால் பாசிகள் படரவும் அனுமதிக்கும். குளிர்ச்சியான இடத்தில் குடிநீர் பாக்டீரியா பாசி என்பது வளர வாய்ப்புகள் குறையும்.

கவனத்தில் கொள்ளுங்கள்:

நாம் தினமும் வீட்டுக்குள் சாதாரணமாக ஒரு இடத்தில் குடிநீரை பிடித்து வைத்திருப்போம். அதனை ஒன்று அல்லது 2 நாட்களில் நாம் பயன்படுத்திவிடலாம். வீட்டின் பிரிட்ஜில் வைக்கப்படும் குடிநீரை, வடிகட்டி வைத்தாலும் நான்கு முதல் 5 நாட்களுக்குள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். குடிநீர் வைத்துள்ள பாத்திரத்தை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். இல்லையேல், பிரிட்ஜில் உணவுப்பொருட்கள் வாயிலாக பூஞ்சைக் காளான் பாடறலாம்.

அதிகபட்சம் 2 நாட்கள் தான்:

நாட்கள் கடந்து நீரை பயன்படுத்தும் சூழல் இருந்தால், கட்டாயம் அந்த நீரை வடிகட்டிய பயன்பாடுக வேண்டும். சீல் வைக்கப்பட்ட அல்லது பூட்டப்பட்ட பாத்திரத்தில் சேமித்து வைக்கலாம். இதனை குளிர்ந்த, இருட்டான பகுதியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். சூரிய ஒளி நேரில் படாமல், வெப்பம் தெரியாமல் இருக்கும் நுண்கிருமிகள் வளரும் வாய்ப்புகள் தவிர்க்கப்படும்.

தரத்தில் கவனம் தேவை:

பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பி வைக்கப்படும் குடிநீர் வெப்பம், சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்க நேர்ந்தால்,பிளாஸ்டிக்கில் இருக்கும் கண்களுக்கு தெரியாத ரசாயனம் சிதைந்து குடிநீரில் கலக்கும். இதனால் உயர்தர பிளாஸ்டிக் பாட்டிலில் நீர் சேமித்து வைப்பதே நல்லது.

திறந்து வைக்காதீங்க:

நமது வீட்டின் அன்றைய வெப்பநிலையில் வைக்கப்படும் குடிநீரை ஒன்று அல்லது அதற்கடுத்த நாள் மட்டுமே பயன்படுத்தலாம். பழமையான குடிநீரை பயன்படுத்துவது நல்லதல்ல. நாளொன்றுக்கு புதிய நீரை குடிக்க பயன்படுத்துவது நல்லது. இயலாத பட்சத்தில் அதனை மறுநாளே பயன்படுத்தலாம். அதற்கடுத்து பயன்படுத்த கூடாது. அதே நேரத்தில் பாட்டிலை திறந்து வைப்பது அறையில் இருக்கும் காற்றில் கலந்துள்ள கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து, நீரின் சுவையை மாற்றும். கண்ணாடி டம்ப்ளரை பயன்படுத்தி, அவ்வப்போது அதனை கழுவி நீரினை குடிக்கலாம். செம்பு பாத்திரம் வைத்து நீர் குடிப்போர், அதனை சுழற்சி முறையில் குடிக்கலாம்.