Cat Smuggle In Chennai: சென்னையில் விற்பனை செய்யப்படும் பிரியாணியில் பூனை இறைச்சி பயன்படா?.. திடுக்கிடவைக்கும் தகவல்.!

சென்னையில் பூனைகள் அடிக்கடி மாயமாவதாக புகார் எழுந்துள்ளது.

Cat Smuggle In Chennai: சென்னையில் விற்பனை செய்யப்படும் பிரியாணியில் பூனை இறைச்சி பயன்படா?.. திடுக்கிடவைக்கும் தகவல்.!
Cat (Photo Credit: Pixabay)

மே 02, சென்னை (Chennai News): தொடர்ந்து சென்னையில் பிரியாணிகளில் சிக்கனுக்கு பதிலாக காக்கா, நாய், பூனைகள் (Cat) சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் வளர்ப்பு பூனைகள் காணாமல் போவதாக விலங்குகள் நல அமைப்புகளுக்கு புகார்கள் வந்தன. அதனைத் தொடர்ந்து பல தரப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டது. அதில் சில பூனைகளைப் பிடித்து செல்வதாக கண்டறியப்பட்டது. Singer Uma Ramanan Passes Away: தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகி உமா ரமணன் மறைவு.. ரசிகர்கள் இரங்கல்..! 

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் சாலையில் சுற்றித்திரியும் பூனைகள் திருடப்பட்டதாக (Cat Smuggle) ஜோஸ்வா என்பவர் புகார் அளித்துள்ளார். நள்ளிரவில் பைக்கில் வந்த இருவர்கள் பூனைகளை திருட முயன்றதாகவும் இது குறித்து கேட்டபோது தன்னை மிரட்டி விட்டு தப்பி சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் சாலையில் சுற்றித் திரியும் பூனைகளை திருடும் கும்பல் அவைகளை இறைச்சி கடைகளுக்கு விற்பதாகவும் ஜோஸ்வா கூறியுள்ளார். இப்படியே போனால் சென்னையில் பூனை இனமே அழிந்து விடும் அவற்றை ஜூவில் மட்டுமே பார்க்க முடியும் என எச்சரித்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on May 02, 2024 12:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).