Cyber Crime (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 03, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் லோன் பெறுவதற்காக, கிரெடிட்பீ (Kreditbee) என்ற லோன் ஆப்பை (Online Loan) அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்தார். பின்னர், அதில் அவரது தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு எண், ஆதார் எண் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். School Student Stabbed: வகுப்பறையில் ஏற்பட்ட மோதல்; சக மாணவனுக்கு கத்திக்குத்து.. நெல்லையில் பரபரப்பு சம்பவம்..!

இதனையடுத்து, அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், 3 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளதாகவும், கீழே உள்ள லிங்கை தொட்டு பார்க்கவும் என வந்துள்ளது. அந்த லிங்கை தொட்டவுடன், உடனே அந்த பெண்ணின் மார்பிங் (Morphing) செய்யப்பட்ட புகைப்படத்தை அனுப்பி, அவரிடம் 3 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், பணம் செலுத்தவில்லை எனில், இந்த புகைப்படத்தை உனது உறவினர் மற்றும் நண்பர்களின் எண்களுக்கு அனுப்பி விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால், மிகவும் மனமுடைந்த அவர் மதுரை சைபர் கிரைம் (Cyber Crime) காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்த விசாரித்த காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் தகுந்த அறிவுரைகள் கூறி, இதிலிருந்து அவரை மீட்டனர். மேலும், சம்மந்தப்பட்ட மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக இளம்பெண் கூறுகையில், 'ஆன்லைன் மூலமாக எந்தவித விவரங்களையும் குறிப்பிட வேண்டாம் எனவும், லோன் தருவதாக ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி அந்த லிங்கை தொட வேண்டாம் எனவும், இதுபோன்ற விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.