ஜனவரி 20, தஞ்சாவூர் (Thanjavur News): தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணிக்கு (Velankanni) பயணம் செய்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வேனில் பயணம் செய்ததாக தெரிய வருகிறது. இவர்கள் நேற்று நள்ளிரவு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசமுத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது: அங்குள்ள மனோரா கிராமத்திற்கு அருகே இவர்களின் வாகனம் சென்ற போது, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்புச் சுவற்றின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நபர்களில் நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். Khelo India Youth Games 2023: தமிழகத்திற்கே பெருமை... கேலோ இந்தியா போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?.. முழு விபரம் இதோ.!
காவல்துறையினர் விசாரணை: மேலும், ஏழு பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி அலறித்துடித்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தோர் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் விபரம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.