ஆகஸ்ட் 13, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம், கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 37). இவருடைய மனைவி உஷா (வயது 35). இவர்களுக்கு ரூபா (வயது 10), பவ்யஸ்ரீ (வயது 9) என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) மாலை, அறிவழகன் தனது மனைவி, இரு மகள்கள் மற்றும் தங்கை மகள் தேஜாஸ்ரீ (வயது 4).ஆகிய ஐந்து பேருடன் இருசக்கர வாகனத்தில் பனங்காடு பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பாலியல் வன்கொடுமை வழக்கு; கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.., மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
மூவர் பலி:
அப்போது, மாதாக்கோட்டை பைபாஸ் பகுதியில் அவர்கள் வந்துகொண்டிருந்தபோது, கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 31) என்பவர் ஓட்டி வந்த இன்னோவா கார், இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக (Car-Bike Accident) மோதியது. அந்தக் காரில் 2 குழந்தைகள் உட்பட ஏழு பேர் நாகூர் தர்காவுக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற அறிவழகன், அவரது மகள் பவ்யஸ்ரீ, மற்றும் தங்கை மகள் தேஜாஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் ஓட்டுநர் கைது:
விபத்தில் படுகாயமடைந்த அறிவழகனின் மனைவி உஷா மற்றும் மகள் ரூபா ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து சம்பவம் குறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, கார் ஓட்டுநரான முகமது ரியாஸை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.