மே 31, நெல்லை (Tirunelveli News): திருநெல்வேலி நகரின் மையப்பகுதியாக உள்ள நெல்லை நகரம், எப்போதும் மக்கள் நடமாட்டம் கொண்ட பரபரப்பான பகுதி ஆகும். நெல்லையப்பர் கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து காணப்படும். இப்பகுதியில் அமைந்துள்ள துணிக்கடை, நகைக்கடை, பத்திரக்கடை, உணவகம் போன்றவை மக்களின் நடமாட்டத்தை கொண்டு இருக்கும். இதனால் அண்டை மாவட்டத்தில் உள்ள பகுதிகளை சேர்ந்த மக்களும் திருமணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பொருட்கள் வாங்க வருவார்கள். தற்போது நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேர் திருவிழா ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. அலைகடலென திரண்டு வரும் மக்களின் வசதிக்காக சாலையோர உணவகம் மற்றும் தின்பண்ட கடைகளும் அங்கு ஏராளமாக செயல்படுகிறது. PM Narendra Modi meditates Vivekananda Rock: விவேகானந்தர் மண்டபத்தில் பயபக்தியுடன் தியானம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.!
சமோசா கடைசியில் தீ விபத்து: இந்நிலையில், வடக்குரத வீதி பகுதியில் செயல்பட்டு வந்த சாலையோர சமோசா கடையில் நேற்று வியாபாரம் நடைபெற்று கொண்டு இருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுதாரித்துக்கொண்ட ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர கதியில் வெளியேறினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு & மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைவதற்குள், கடையில் பயன்பாட்டில் இருந்த சிலிண்டரானது வெடித்து சிதறியது. இதனால் பதறிப்போன மக்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். எழும், கடை ஊழியர்கள் உட்பட 6 பேர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்டு தாமதமாக வெடிப்பு ஏற்பட்டாலும், தீயை கண்டதும் மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறிய காரணத்தால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து சம்பவத்தின் வீடியோ காட்சிகள் உங்களின் பார்வைக்கு:
— Thinakaran Rajamani (@thinak_) May 30, 2024
வேறொரு கோணத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளி:
#WATCH | Tirunelveli, Tamil Nadu: 6 people were injured and 2 nearby shops gutted in the fire as a gas cylinder exploded at a shop in Tirunelveli yesterday
(Viral video confirmed by Police) pic.twitter.com/kk1xpws165
— ANI (@ANI) May 31, 2024