மே 31, நாகர்கோவில் (Kanyakumari News): இந்திய பொதுத் தேர்தல்கள் 2024 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஏழு கட்ட தேர்தலில், ஜூன் 01ம் தேதியான நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஜூன் 04ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான கூட்டணிக்கும், 2 முறை ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நடைபெறும் வரும் நேரடி அரசியல் மோதலின் முடிவுகள் ஜூன் 04ல் முடிவுக்கு வரும் என்பதால், உலகளவில் இந்திய தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த முறையும் பாஜக வெற்றியடையும் பட்சத்தில், பிரதமர் வேட்பாளராக அறிவிப்பட்டுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மீண்டும் அரியணையை அலங்கரிக்கும். காங்கிரஸ் சார்பில் இன்னும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாத சூழ்நிலையில், ஜூன் 04ம் தேதி முடிவுகளை பொறுத்து அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Bihar Heatwave Death: பீகாரை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; தேர்தல் பணியாளர்கள் உட்பட 19 பேர் பரிதாப பலி.!
ஆழ்ந்த தியானத்தில் பிரதமர் மோடி: இந்நிலையில், கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து நேற்று மாலை 05 மணியளவில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தார். அவரை மாவட்ட ஆட்சியர், பாஜக நிர்வாகிகள் உட்பட பலரும் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து, பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற பிரதமர், தேவியை தரிசனம் செய்துவிட்டு படகு தளத்திற்கு புறப்பட்டார். மாலை 06:15 மணியளவில் விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளின் வரவேற்பை தொடர்ந்து, இரவு 7 மணிமுதல் 07:30 மணிவரை விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் தனது தியானத்தை மேற்கொண்டார். பிரதமரின் வருகையையொட்டி கடற்படை, துணை இராணுவ, 4 டிஐஜி, 10 எஸ்பி, 3000 காவல்துறையினர் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பயண பாதைகளில் 6 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் ஜூன் 01ம் தேதி வரை தொடர் தியானத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 01ம் தேதி மாலை 03:00 மையளவில் திருவள்ளுவர் சிலைக்கு சென்றுவிட்டு பின் திருவனந்தபுரம் வந்து டெல்லி செல்கிறார்.
#WATCH | Kanniyakumari, Tamil Nadu | PM Narendra Modi meditates at the Vivekananda Rock Memorial, where Swami Vivekananda did meditation. He will meditate here till 1st June pic.twitter.com/X4bvAdgZLs
— ANI (@ANI) May 31, 2024