ஆகஸ்ட் 30, சான் பிரான்சிஸ்கோ (Technology News): தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை 1 ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். இதற்காக அரசுமுறை பயணமாக, உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா (TN CM MK Stalin US Visit) புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு வழங்கி இருந்தனர். அதனைத்தொடர்ந்து, நேற்று முதல் நாளாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. TN Organ Donation: உடல் உறுப்புக்காக காத்திருக்கும் பலர்.. உடல் உறுப்பு தானம் கட்டாயம்..!
ரூ.450 கோடி செலவில் நோக்கியா முதலீடு:
இதனிடையே, அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் உள்ள தரமணி பகுதியில் அப்லைட் மெடீரியல்ஸ் (Applied Materials) நிறுவனம் சார்பில் புதிய செமி கண்டெக்டர் ஆலை, சிறுசேரியில் ரூ.450 கோடி செலவில் நோக்கியா நிறுவனத்தின் தொழிற்சாலை, கீக்மைன்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், பேபால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மைக்ரோசிப், இன்பிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து வேலைவாப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4100 பேருக்கு மொத்தமாக வேலைவாய்ப்பு :
செங்கல்பட்டு பகுதியில் ரூ.400 கோடி செலவில் எலக்ட்ரோலைசர் உற்பத்தி மற்றும் ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் அமைகிறது. இதனால் 500 பேருக்கு வேலை கிடைக்கும். கீக்மைண்ட்ஸ் (GeakMinds) நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய முதலீடு காரணமாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பேபால் நிறுவனத்தின் முதலீடு காரணமாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோவை சூலூரில் அமையவுள்ள யீல்டு எஞ்சினியரிங் சிஸ்டம் (Yield Engineering Systems) தொழிற்சாலை வாயிலாக 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.150 கோடி செலவில் நிறுவனம் அமைக்கப்படுகிறது. மதுரையில் ரூ.50 கோடி செலவில் அமையவுள்ள குளோபல் டெலிவரி நிறுவனத்தின் வாயிலாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். செம்மஞ்சேரி பகுதியில் அமையவுள்ள மைக்ரோசிப் நிறுவனத்தால் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், ரூ.250 கோடி செலவில் நிறுவனம் தொடங்கப்படும்.
அமெரிக்காவில் தமிழ்நாடு முதல்வருக்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு:
அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தாய்த்தமிழ் உறவுகள் அளித்த நெகிழ்ச்சியான வரவேற்பில்❤️ pic.twitter.com/58IaUSdIUI
— M.K.Stalin (@mkstalin) August 29, 2024
முதல் நாளை உடற்பயிற்சியுடன் தொடங்கிய தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்:
Starting the day with a brisk walk in San Francisco, gearing up for the Investors Conclave this evening.#morningwalk #morningworkout pic.twitter.com/lzOdl2yki8
— M.K.Stalin (@mkstalin) August 29, 2024