
மார்ச் 13, திருவெறும்பூர் (Trichy News): தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் பள்ளிகளில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 03, 2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 25, 2025 வரையில் தேர்வுகள் அட்டவணைப்படி நடந்து வருகிறது. எதிர்கால வாழ்க்கைக்கான படி என்பதால், மாணவ-மாணவியர்கள் தங்களின் தேர்வுகளை சிறப்பாக எழுகி வருகின்றனர். இதனிடையே, தேர்வெழுதும் மாணவர்களின் பெற்றோர், உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தும் சோகமும் நடந்துள்ளது.
11ம் வகுப்பு மாணவியின் தந்தை உயிரிழந்தார்:
தேர்வு தொடங்கிய அன்றில் இருந்து, ஒவ்வொரு தேர்வின்போதும் இந்த சோகம் தொடருகிறது. மாநில அளவில் பல இலட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுதி வரும் நிலையில், ஒருசிலரின் பெற்றோர் உயிரிழப்பு ஏற்படுவதாக அடுத்தடுத்து வரும் செய்திகள் வருத்தத்தை தருகின்றன. அந்த வகையில், இன்று 11 ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி, தனது தந்தையின் உயிரிழப்பை தொடர்ந்து, தந்தையின் ஆசைப்படி படிக்க வேண்டும் என, பள்ளிக்கு வந்து பொதுத்தேர்வு எழுதினார். Indian Rupee Symbol: தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு.. இனி '₹' க்கு பதில் 'ரூ'.. பாஜக கடும் எதிர்ப்பு, திமுக தரப்பு ஆதரவு.!
மூச்சுத்திணறல் மரணம்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், தேநீர்ப்பட்டி, அரசூர் கிராமத்தில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர். சண்முகத்தின் மகள் ஷாலினி (வயது 17). சிறுமி அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். சண்முகத்துக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லை. இதனால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, பின் வீட்டுக்கு உடல்நலத்துடன் திரும்பினார். இதனிடையே, நேற்று இரவு திடீரென சண்முகத்துக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
தந்தையின் அறிவுரையை ஏற்று கண்ணீருடன் பேட்டி:
இதனால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சண்முகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக மீட்டு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுமி ஷாலினிக்கு இன்று தேர்வு ஆகும். தந்தை உயிரிழந்த சோகத்திலும், தந்தையின் அறிவுரைப்படி அவர் தேர்வெழுத வந்தார். கண்ணீருடன் தேர்வெழுத சென்ற மாணவி, தந்தை எப்போதும் படி என கூறுவார். இன்று அவர் இல்லை. அவரின் அறிவுரைப்படி நான் தேர்வெழுத செல்கிறேன் என மாணவி கண்ணீருடன் சோகத்தை விவரித்தார்.
சிறுமி தனது வருத்தத்தை பகிர்ந்துகொள்ளும் காணொளி:
#Watch | தந்தை உயிரிழந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுதிய 11ம் வகுப்பு மாணவி!#SunNews | #Trichy | #PublicExam pic.twitter.com/RWFOoCtwjK
— Sun News (@sunnewstamil) March 13, 2025
வீடியோ நன்றி: சன் தொலைக்காட்சி