செப்டம்பர் 11, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
நாளைய வானிலை (Tomorrow weather): இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் லேசான மழையும், தமிழகம் முழுவதும் இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிக வெயிலும் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. TN Quarterly Exam 2024: 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை.. காலாண்டு தேர்வு தேதிகள் அறிவிப்பு.. விபரம் இதோ.!
மீனவர்களுக்கு எச்சரிக்கை: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.