செப்டம்பர் 12, சென்னை (Chennai): அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வுக்கால அட்டணை, தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை வெளியாகியுள்ளது.
ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான தேர்வு:
செப்டம்பர் 20 ஆம் தேதி - தமிழ்,
செப்டம்பர் 21ஆம் தேதி - உடற்கல்வி தேர்வு,
செப்டம்பர் 23ஆம் தேதி - ஆங்கிலம்,
செப்டம்பர் 24ஆம் தேதி - விருப்ப மொழிப்பாடம்,
செப்டம்பர் 25ஆம் தேதி - கணிதம்,
செப்டம்பர் 26 ஆம் தேதி - அறிவியல்,
செப்டம்பர் 27ஆம் தேதி - சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன. Batteries: மறந்தும் குழந்தைகளிடம் பேட்டரி, காந்தத்தை விளையாட கொடுக்காதீங்க; மரணமும் ஏற்படலாம் - மருத்துவர் எச்சரிக்கை.!
11ம் வகுப்பு (11th Quarterly Exam Date) தேர்வுகள் விபரம்: அதேபோல, பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது.
செப்டம்பர் 19ஆம் தேதி - தமிழ் மற்றும் விருப்பம் மொழிப்பாடம்,
செப்டம்பர் 20 ஆம் தேதி - ஆங்கிலம்,
செப்டம்பர் 21 ஆம் தேதி - இயற்பியல், எக்கனாமிக்ஸ், எம்ப்லாய்மென்ட் ஸ்கில்ஸ்,
செப்டம்பர் 23ஆம் தேதி - கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பயாலஜி, டெக்ஸ்டைல், உணவு சேவை மேம்பாட்டு, நர்சிங், அக்ரிகல்ச்சர் சயின்ஸ் ஆகிய தேர்வுகளும்,
செப்டம்பர் 25ஆம் தேதி - வேதியியல், ஜியோகிராபி, அக்கவுண்டன்சி ஆகிய தேர்வுகளும்,
செப்டம்பர் 26 ஆம் தேதி - கம்யூனிகேடிவ் இங்கிலீஷ், எத்திக்ஸ் இந்தியன் கல்ச்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, பொலிடிகல் சயின்ஸ் ஆகிய தேர்வுகளும்,
செப்டம்பர் 27ஆம் தேதி - பயாலஜி, பாட்டனி, ஹிஸ்டரி, பிசினஸ் மேத்தமேடிக்ஸ், பேசிக்ஸ் சிவில் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன.
பன்னிரண்டாம் (12th Quarterly Exam Date) வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு பொதுத்தேர்வு: 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகளை பொறுத்த வரையில், செப் 19 அன்றே தேர்வுகள் தொடங்கி நடைபெறுகிறது.
செப்டம்பர் 19ஆம் தேதி - தமிழ் மற்றும் மொழிப்பாடம்,
செப்டம்பர் 20ஆம் தேதி - ஆங்கிலம்,
செப்டம்பர் 21 ஆம் தேதி - இயற்பியல், எக்கனாமிக்ஸ், எம்பிளாய்மெண்ட் ஸ்கில்ஸ்,
செப்டம்பர் 23ஆம் தேதி - கணிதம், ஜூவாலஜி, காமர்ஸ், மைக்ரோ பயாலஜி, நியூட்ரீசியன், டெக்ஸ்டைல்ஸ், உணவு மேம்பாடு, அக்ரிகல்ச்சர் சயின்ஸ்,
செப்டம்பர் 25ஆம் தேதி - பயாலஜி, பாட்டனி, ஹிஸ்டரி, பிசினஸ் மேத்தமேடிக்ஸ், பேசிக் சிவில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், டெக்ஸ்டைல் இன்ஜினியரிங்,
செப்டம்பர் 26ஆம் தேதி - கம்யூனிகேடிவ் எலக்டிவ், எத்திக்ஸ் இந்தியன் கல்ச்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோகெமிஸ்ட்ரி, நர்சிங்,
செப்டம்பர் 27ஆம் தேதி - கெமிஸ்ட்ரி, அக்கவுண்டன்சி, ஜியோகிராபி ஆகிய தேர்வுகளும் நடைபெறுகின்றன.