Sexual Abuse | Rape File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 07, சிந்தாதிரிப்பேட்டை (Chennai News): சென்னையில் உள்ள சிந்தாதரிப்பேட்டை (Chintadripet) அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகாரில், சென்னையில் உள்ள சிந்தாதரிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் தந்தை, அவரின் மகள் 10 க்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தோழியின் அதிர்ச்சி செயல்:

அதாவது, கல்லூரி மாணவி (College Girl Raped) ஒருவர் லேசான மனநலம் பாதிக்கப்பட்ட தன்மையுடன் வாழ்ந்து வருகிறார். இவர் தனது தந்தையுடன் வசித்து வந்த நிலையில், கல்லூரிக்கு சென்று வரும்போது, தோழி ஒருவருக்கு தனது நிலை குறித்து கூறியுள்ளார். இந்த தோழி, அந்த தகவலை கல்லூரி மாணவர்களான ஆண் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

பாலியல் பலாத்காரம் (College Girl Sexually Abused in Chennai):

இதனால் நிலைமையை தனக்கு சாதகமாக்கிய நபர்கள், மாணவியிடம் அன்பாக பேசிப்பழகுவது போல, கீழ்பாக்கம் பகுதியில் இருக்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவ்வாறான கொடுமை கடந்த ஓராண்டாக நடந்து வந்ததாக தெரியவருகிறது. Car Plunged into Lake: காலையிலேயே போதை? அதிவேகம்.. கார் ஏரியில் பாய்ந்து 5 இளைஞர்கள் பலி.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 

Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)
Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)

காவல்துறையினர் விசாரணை:

இதனிடையே, மகளின் நடத்தையில் இருந்த மாற்றத்தை கவனித்த தந்தை, கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கு முதற்கட்ட விசாரணை நடத்திய அதிகாரிகள், சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். இதன்பேரில் நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் அம்பலமானது.

கல்லூரி மாணவர்கள்:

அதாவது, மனநலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் நிலைமையை தனக்கு சாதகமாக்கிய இளைஞர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளதால், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவியின் தோழி மற்றும் அவரின் நண்பர்களுக்கு வலைவீசியுள்ளனர்.

அயனாவரம் போல துயரம்:

மேலும், மாணவியின் அலைபேசி உரையாடலை ஆய்வு செய்தபோது, பலரும் மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும் தொல்லை கொடுத்தது அம்பலமானது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அயனாவரத்தில் நடந்த நிலையில், அதனைப்போன்ற துயரம் தற்போது நடந்தது அம்பலமாகியுள்ளது. மேற்கூறிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.