Gold Silver Price (Photo Credit: Pixabay)

மார்ச் 15, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் போர்ப்பதற்றம் தொடர்ந்து நீடித்து வருவதால், தேசிய அளவில் பங்குச்சந்தை பல்வேறு மாற்றங்களை கண்டுள்ளது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம், பங்குச்சந்தை முதலீடு விஷயங்களில் விதிக்கப்பட்ட கெடுபிடிகள் காரணமாக, இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிவு நிலையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்துடன் இருக்கிறது. ஏற்கனவே தங்கத்தின் விலை உலகளாவிய சூழல் காரணமாக ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை சவரன் விற்பனை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை (Today Gold Rate in Chennai):

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரன் ரூ. 640 அளவில் குறைந்துள்ளது. சவரன் தங்கத்தின் விலை கிராம் இன்று ரூ.8220 க்கும், சவரன் தங்கம் விலை ரூ.65760 க்கு விற்பனை செய்யப்படுகிறது.