ஜூன் 05, மைசூரு (Karnataka News): கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரு நகர், சாமுன்டிமலை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு, சசிகலா மற்றும் சந்தனா என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரையும், சவுகார் உண்டி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ், வினோத்ராஜ் ஆகிய சகோதரர்களுக்கு திருமணம் நடத்தி முடித்துள்ளார். Gold Bangle And Platinum Kammal Theft: தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை சம்பவம்; 11 சவுரன் வளையல், பிளாட்டினம் கம்மல் திருட்டு..!
திருமணத்துக்கு தனது 2 மகள்களுக்கும் தலா 30 கிராம் நகை மற்றும் மணமகன்களுக்கு தலா 1 இருசக்கர வாகனம் போன்றவற்றை வரதட்சணையாக (Dowry Is Cruel) தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், திருமணத்தின் போது தலா 10 கிராம் நகை மட்டுமே கொடுத்துள்ளார். இதனையடுத்து, மீதமுள்ள மொத்தம் 40 கிராம் நகை, 2 இருசக்கர வாகனம் ஆகியவற்றை வாங்கி வரும்படி மணமகனின் குடும்பத்தினர் சசிகலா மற்றும் சந்தனாவை கொடுமை படுத்தி வந்துள்ளனர். மேலும், இவர்களை அடித்து தாக்கியுள்ளனர், இதில், சந்தனா கர்ப்பமாக இருந்துள்ளார். அவர்கள் பலமாக தாக்கியதில், அவரது வயிற்றில் இருந்த கரு கலைந்துள்ளது.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் தனது தாய் வீட்டிற்கு சென்று, நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளனர். பின்னர், சம்மந்தபட்ட மணமகனின் குடும்பத்தினர் 4 பேர் மீது, இவர்களின் பெற்றோர் இலவாலா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில், அவர்கள் 4 பேர் மீதும் வரதட்சணை கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.