Couple Silambarasan - Kala | Accident File Pic (Photo Credit: @Sriramrpckanna1 X / Pixabay)

மார்ச் 05, முசிறி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி, வடக்கு அயித்தாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சிலம்பரசன் (வயது 34). இவரின் மனைவி கலா (வயது 27). சிலம்பரசன் விவசாயியாக இருந்து வருகிறார். தம்பதிகளுக்கு 8 மாதமேயாகும் ஆண் குழந்தை இருந்துள்ளது. சமீபத்தில் குழந்தை உடல்நலம் குன்றி உயிரிழந்து இருக்கிறது.

நண்பருடன் பயணம்: இந்நிலையில், சிலம்பரசனுக்கு, அதே பகுதியில் வசித்து வரும் குபேந்திரன் (வயது 21) என்பவர் நண்பராக இருந்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவில், தங்களின் இருசக்கர வாகனத்தில் வடக்கு அயித்தம்பட்டி பகுதியில் உள்ள நான்காவது மைல் பகுதியில் சென்றுகொண்டு இருந்தனர்.

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதல்: அச்சமயம், துறையூரில் இருந்து குளித்தலை கார் ஒன்று வந்த நிலையில், கார் - இருசக்கர வாகனம் மோதி (Musiri Husband Died Wife Suicide) விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிலம்பரசன், நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை குளித்தலை பகுதியை சேர்ந்த சக்தி முருகன் (வயது 56) என்பவர் இயக்கி இருக்கிறார். Flipkart UPI: மற்ற யுபிஐ ஆப்களுக்கு ஆப்பு.. அறிமுகமான பிளிப்கார்ட் யுபிஐ சேவை.. இவ்வளவு சலுகைகளா..! 

Accident (File Pic)

ஒருவர் பலி, மற்றொருவர் காயத்துடன் உயிர்பிழைப்பு: இவ்விபத்தில் குபேந்திரன் மட்டும் காயத்துடன் உயிர்தப்பவே, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த முசிறி காவல் துறையினர், சிலம்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிலம்பரசன் மருத்துவ சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதி செய்யப்ட்டர்.

மனமுடைந்துபோன மனைவி தந்த அதிர்ச்சி: இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் கலாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பதறியபடி மருத்துவமனைக்கு விரைந்த கலா, கணவரின் உடலைக்கண்டு கதறியழுதார். பின் உறவினர்களால் காலால் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இன்று காலையில் கலா வீட்டில் இருந்தபோது அதீத துக்கத்தால் வீட்டருகே இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கணவன் - மனைவி பலி: கலா கிணற்றில் குதிப்பதை கண்டு பதறிப்போன உறவினர்கள், முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்புப்படை நிலைய அதிகாரி கர்ணன் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து கலாவை மீட்டனர். ஆனால், அவரின் உயிர் காலனால் ஆட்கொள்ளப்பட்டது. பின் அவரின் உடலும் காவல் துறையினரால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.