ஜனவரி 08, சென்னை (Chennai): போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு (Govt Bus Strike) அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. Child Dies In Wall Collapse: சுவர் இடிந்து விழுந்து குழந்தை பலி... கனமழையால் நேர்ந்த சோகம்..!
போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை: இந்நிலையில் மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உட்பட போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் வரும் 9ம் தேதி கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கும் நிலையில், யாருக்கும் விடுப்பு அல்லது ஓய்வு இல்லை. வார விடுமுறை அல்லது பணி ஓய்வில் இருப்பவர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். அதுமட்டுமின்றி தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கையும், போராட்டத்தில் கலந்து கொள்ள தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.