ஜூலை 03, திருப்புவனம் (Sivaganga News): சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜித்குமார் (வயது 27). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடுபோனதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தனிப்படை காவல்துறையினர் காவலாளி அஜித்குமார் மீது சந்தேகப்பட்டு கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
சித்ரவதை செய்த போலீசார் :
போலீசார் இரண்டு நாட்களாக தொடர்ந்து அவரை சித்ரவதை செய்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சியும் சமூகவலைத்தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. தற்போது இந்த விவகாரத்தில் ஈடுபட்ட ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசாரணையை சிபிசிஐடி தற்போது கையில் எடுத்திருக்கிறது. மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி எஸ்.பி ஆசிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Sivagangai Custody Death: சிவகங்கை இளைஞர் மரணம்.. அரசுப்பணி, பட்டா வழங்கிய தமிழ்நாடு அரசு.!
பேரம் பேசிய அரசியல் பிரமுகர் :
இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி முன்னெடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக பல கடுமையான வாதங்களையும் முன் வைத்திருந்தனர். மேலும் அஜித்குமாரின் உயிரிழப்பை மறைக்க அரசியல் பிரமுகர் ஒருவருடன் காவல்துறையினர் சேர்ந்து ரூ.50 லட்சம் பணம் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இலவச வீட்டு மனை பட்டா, அரசுப்பணி :
இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தமிழ்நாடு முதல்வர் சார்பில் அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தங்களது ஆறுதலை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர், அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் அரசின் சார்பாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து வழங்கினர். அஜித் குமாரின் தம்பிக்கு அரசு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.
நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய் :
மேலும் நேற்று முன்தினம் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்ற தவெக நிர்வாகிகள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். அப்போது செல்போன் மூலம் தொடர்பு கொண்ட புஸ்சி ஆனந்த், அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய், அஜித் குமாரின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அஜித்குமாரின் பெற்றோர் மற்றும் சகோதரரை நேரில் பார்த்து விசாரித்தவர் நடந்த சம்பவத்துக்கு ஆறுதல் தெரிவித்து குடும்பத்தினருடன் பேசியிருக்கிறார். ரூ.2 லட்சம் நிவாரணமாமும் வழங்கியிருக்கிறார்.
உயிரிழந்த இளைஞரின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் :
Tamilaga Vettri Kazhagam (TVK) chief and film actor Vijay met the family of Ajith Kumar, a resident of Sivaganga district, who allegedly died after being brutally assaulted during police interrogation at Thiruppuvanam police station.
The incident has triggered widespread outrage… pic.twitter.com/8p8sstKTTY
— All India Radio News (@airnewsalerts) July 2, 2025