Sivaganga Custody Death Case (Photo Credit : @Govindarajan67 / @bbctamil X)

ஜூலை 02, திருப்புவனம் (Sivaganga News): சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் அஜித்குமார் (வயது 27). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடுபோனதாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய தனிப்படை காவல்துறையினர் காவலாளி அஜித்குமார் மீது சந்தேகப்பட்டு கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். Breaking: ஜெனெரேட்டர் புகையை சுவாசித்த தந்தை, 2 மகன்கள் பரிதாப பலி.. சென்னையில் சோகம்.! 

சித்ரவதை செய்த போலீசார் :

போலீசார் இரண்டு நாட்களாக தொடர்ந்து அவரை சித்ரவதை செய்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சியும் சமூகவலைத்தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. தற்போது இந்த விவகாரத்தில் ஈடுபட்ட ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான விசாரணையை சிபிசிஐடி தற்போது கையில் எடுத்திருக்கிறது. மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி எஸ்.பி ஆசிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரின் குடும்பத்திடம் பேரம் பேசிய அரசியல் பிரமுகர் :

இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி முன்னெடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக பல கடுமையான வாதங்களையும் முன் வைத்திருந்தனர். மேலும் அஜித்குமாரின் உயிரிழப்பை மறைக்க அரசியல் பிரமுகர் ஒருவருடன் காவல்துறையினர் சேர்ந்து ரூ.50 லட்சம் பணம் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இலவச வீட்டு மனை பட்டா, அரசுப்பணி :

இதனை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முதல்வர் சார்பில் அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் அஜித் குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று தங்களது ஆறுதலை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர், அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் அரசின் சார்பாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார். அந்த வகையில் தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டாவை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து வழங்கினர். அஜித் குமாரின் தம்பிக்கு அரசு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.