டிசம்பர் 09, சென்னை (Chennai News): விடுதலை சிறுத்தைகள் (Viduthalai Chiruthaigal Katchi) கட்சியின் பொதுச்செயலாளர்களில், கடந்த சில மாதங்களாக மிகவும் கவனம் பெற்ற நபராக இருந்து வந்தவர் ஆதவ் அர்ஜுனா (Aadhav Arjuna). கூடைப்பந்து (Basket Ball Player) விளையாட்டு வீரரான ஆதவ் அர்ஜுனா, தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டதைத்தொடர்ந்து, அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் திமுக - விசிக (DMK VCK) இடையே கொள்கை தொடர்பாக முரண்பட்ட கருத்து மோதல்கள் உண்டாகின.
சர்ச்சை கருத்துக்கள்:
விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ், கட்சியின் நிலைப்பாடுகளை பொது வழிகளில் தெரிவிக்கும் போது, அதன் கூட்டணியில் இருக்கும் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பதாக தொடர் குற்றச்சாட்டுகளை எழுந்து வந்தது. சமீபத்தில் தனியார் ஊடக நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். Madurai Meenakshi Temple: மீனாட்சி கோவிலில் குடமுழுக்கு எப்போது? பக்தர்களுக்கு உற்சாக செய்தி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு.!
மன்னர் ஆட்சி வாதம்:
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், திமுகவை மறைமுகமாக பேசி விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அதே மேடையில், விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனன், மன்னர் ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுகிறார்கள் என்ற வாதத்தை முன் வைத்திருந்தார். இந்த விஷயம் நேரடியாக திமுகவை தாக்குவதாக அரசியல் மட்டத்தில் பரபரப்பு விவாதத்தை உண்டாக்க, திமுக சார்பில் கடும் விமர்சனமும் முன் வைக்கப்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் ஆதவ் அர்ஜுனனுக்கு எதிராக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
ஆதவ் அர்ஜுனன் மீது நடவடிக்கை:
இதனிடையே, அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ஆதவ் அர்ஜுனன் மீது கட்சி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என அறிவித்திருந்தார். இன்று (டிச.09, 2024) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மதியத்திற்கு மேல் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலினை (MK Stalin). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி (Thol Thirumavalavan) நேரில் சந்திப்பதாகவும் தகவல் வெளியானது.
கட்சியில் இருந்து இடைநீக்கம்:
இந்நிலையில், கட்சியின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதக கூறி, ஆதவ் அர்ஜுனனை தற்காலிகமாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்து உத்தரவிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் வாயிலாக ஆறு மாத காலத்திற்கு ஆதவ் அர்ஜுனன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அவர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும், விசிக தலைமைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது இதன் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Bomb Threatening: 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை தீவிர சோதனை.!
அறிக்கை வெளியீடு:
ஆறு மாதங்களுக்கு பின் கட்சி தலைமை எடுக்கும் நடவடிக்கைக்கு அர்ஜுனன் உடன்படும் நிலையில், அவருக்கு கட்சி பொறுப்பு வழங்கப்படும் எனவும், மேற்படி அவர் தனிப்பட்ட விருப்பங்களுடன் செயல்பட்டால், அவர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து மொத்தமாக விடுவிக்கப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளப் பதிவில்,
"1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனன் பேசிய காணொளி:
நமது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை#எல்லோருக்குமான_தலைவர்_அம்பேத்கர் pic.twitter.com/LyOFnYOqSV
— Aadhav Arjuna (@AadhavArjuna) December 6, 2024
ஆதவ் அர்ஜுனன் நீக்கம் தொடர்பாக விசிக தலைமை அறிவிப்பு:
ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு
------------------------------------
1. கட்சியின் துணை பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது… pic.twitter.com/NwHByK10XB
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 9, 2024
புத்தக வெளியீடு விழாவில் ஆதவ் அர்ஜுனன்:
நமது 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியிடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.#VoiceOfCommons #EllorukumanaThalaivarAmbedkar #Ambedkar pic.twitter.com/qLz9GQVUry
— Aadhav Arjuna (@AadhavArjuna) December 7, 2024