Coimbatore Central Prison Vikram Video on Life Threatening (Photo Credit: @SparkMedia_TN / @Idam_valam X)

பிப்ரவரி 07, கோயம்புத்தூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பகுதியில், கோவை மத்திய சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு மாநில அளவிலான பல குற்றவாளிகள், முக்கிய கைதிகள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருநெல்வேலியைச் சேர்ந்த குற்றவழக்கில் தொடர்புடைய ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (வயது 33) என்பவர் மர்மமான வகையில் உயிரிழந்தார். Annamalai: திராவிட அரசின் அல்வா வகைகள் - பட்டியலிட்ட அண்ணாமலை.. கடும் விமர்சனம்.! 

ஆயுள் தண்டனை கைதியின் அதிர்ச்சி வீடியோ:

இந்நிலையில், தற்போது கைதி ஒருவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, சிறை வளாகத்தில் இருந்து வழக்கறிஞருக்கு வீடியோ காலில் தொடர்புகொண்டு, தான் பேசும் வீடியோவை வெளியிடுமாறு கோரிக்கை வைத்துள்ள அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் கைதி விக்ரம் என்பவர், வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.

தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக தகவல்:

தனது உயிருக்கு சிறைக்குள் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன்னை எப்படியேனும் கொலை செய்துவிடுவார்கள். அவ்வாறு நான் உயிரிழந்தால் சதிஷ், பாலு, மோகன் ராம் உட்பட 4 பேர் காரணம். என்னை காப்பாற்ற வீடியோவை தம்பி (வழக்கங்கறிஞரை குறிப்பிடுகிறார்) உடனடியாக வெளியீடு. எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என அந்த வீடியோவில், ஆயுள் தண்டனை கைதி பேசுகிறார்.

இந்த வீடியோ வைரலாகி வருவதைத்தொடர்ந்து, சிறைத்துறை நிர்வாகம் விக்ரமுக்கு செல்போன் எப்படி கிடைத்தது? என விசாரணை நடத்தி வருகிறது. விக்ரம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

கைதி விக்ரம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறும் காணொளி: