![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/annamalai-mk-stalin-photo-credit-annamalai-k-mkstalin-x-.jpg?width=380&height=214)
பிப்ரவரி 07, திருநெல்வேலி (Tirunelveli News): தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் (MK Stalin), திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுமுறை (MK Stalin Tirunelveli Visit) சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தமாக ரூ. 1304.66 கோடி செலவில் முடிவுற்ற 23 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.309.05 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தமாக 75,151 பயனாளிகளுக்கு ரூ. 167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மத்திய அரசு வஞ்சிக்கிறது - முக ஸ்டாலின்:
அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் முக ஸ்டாலின், "மத்திய அரசு மாநிலத்திற்கான நிதியை வழங்குவது இல்லை. தமிழ்நாட்டுக்கான நீதியும் வஞ்சிக்கப்படுகிறது. நிதியும் இல்லை, நீதியும் இல்லை என மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. பட்ஜெட்டுக்கு முன்னர் அல்வா சமைத்து சாப்பிடுகின்றனர். தமிழ்நாட்டுக்கு மட்டும் எப்போதும் அல்வா தருகின்றனர்" என மத்திய அரசை விமர்சித்து பேசி இருந்தார். 8-Year-Old Girl Harassed: மணப்பாறையில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்; குவியும் புகார்.. அதிர்ச்சியில் திருச்சி மக்கள்.!
டிராமா மாடல் அரசு பொய்களை கூறுகிறது - அண்ணாமலை:
இந்த விசயத்திற்கு தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் ஒன்றை தெரிவித்துள்ளார். அந்த எக்ஸ் பதிவில், "திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் (காங்கிரஸ் தலைமையிலான அகில இந்திய கூட்டணி) கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப வெட்கமாக இல்லையா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அண்ணா அறிவாலயத்தை கேலி செய்து புகைப்படம் வெளியீடு:
இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படத்தில் முக ஸ்டாலின் அல்வா கடை என பெயரிடப்பட்டுள்ளது. அந்த அல்வா கடை சென்னை தேனாம்பேட்டையில் இருப்பதாகவும், அதுவே அண்ணா அறிவாலயம் எனவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அல்வா வகைகள் என அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என சில வகைகளும் அதில் இணைக்கப்பட்டுள்ளன.
முக ஸ்டாலின் அல்வா கடை தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைப்பதிவு:
திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட மக்களை வெள்ளத்தில் தத்தளிக்க விட்டுவிட்டு, இந்திக் கூட்டணிக் கூட்டத்தில் சமோசா சாப்பிட டெல்லி வரை சென்றீர்களே. அது நினைவில்லையா முதலமைச்சர் அவர்களே?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் சென்று, உங்கள் டிராமா மாடல் அரசின் பொய்களைப் பரப்ப… pic.twitter.com/6XMcQP3ZsJ
— K.Annamalai (@annamalai_k) February 7, 2025