செப்டம்பர் 01, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழை வட தமிழக கடலோர பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இந்த நிலையில் காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், விழுப்புரம், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. LPG Cylinder Price: குறைந்தது சிலிண்டர் விலை.. செப்டம்பர் மாத முதல் நாளே தித்திப்பு செய்தி.!
சென்னை வானிலை (Chennai Weather) :
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.